தீ விபத்துக்குள்ளான எல்.ஐ.சி அலுவலகத்தில் அமைச்சர் ஆய்வு.

Published Date: December 18, 2025

CATEGORY: CONSTITUENCY

மதுரையில் தீ விபத்துக்குள்ளான எல்.ஐ.சி அலுவலகக் கட்டிடத்தை மாநில தகவல் தொழில்நுட்பவியல், எண்ம சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வியாழன்க்கிழமை ஆய்வு செய்தார்.

மதுரை ரயில் நிலையம் எதிரே அமைந்துள்ள எல்.ஐ.சி கிளை அலுவலகத்தில் புதன்கிழமை இரவு திடீரென தீ விபத்து நிகழ்ந்தது. இதில் அந்த அலுவலக முதுநிலை மேலாளர் கல்யாணி நம்பி (54) உடல் கருகி உயிரிழந்தார். அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாகின. இந்தச் சம்பவம் தொடர்பாக திலகர் திடல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தீ விபத்துக்குள்ளான இந்த அலுவலகத்தில் நடைபெற்று வரும் மீட்பு பணிகளை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வியாழன்க்கிழமை ஆய்வு செய்தார். அப்போது மதுரை மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவீன்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

Media: Dinakaran